பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்


பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்
x

பெத்தநாயக்கன்பாளையம் அருகே பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி, மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் மனு கொடுத்தார். அதில், ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வரும் கல்யாண சுந்தரம் என்பவர் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாகவும், போலியான கையெழுத்துக்களை போட்டு இருப்பதாகவும் முறையாக பணிக்கு வராமல் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்திய ஒன்றிய ஆணையாளர் சந்திரசேகர், பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி செயலாளர் கல்யாண சுந்தரத்தை பணி இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.


Next Story