சென்னையில், மே 5-ந்தேதி சுதேசி விழிப்புணர்வு மாநாடு; எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்


சென்னையில், மே 5-ந்தேதி சுதேசி விழிப்புணர்வு மாநாடு; எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
x

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் சென்னையில், மே 5-ந்தேதி சுதேசி விழிப்புணர்வு மாநாடு எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

சென்னை,

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழா 'சுதேசி விழிப்புணர்வு மாநாடு' என்ற பெயரில் வருகிற 5-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு, மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைவர் அ.முத்துகுமார் மாநாட்டு கொடியினை ஏற்றுகிறார்.

வி.ஜி.பி. தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றுகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நலத்திட்டங்கள் வழங்கி பேசுகிறார்.

மாநாட்டில், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.பி.சண்முகநாதன், கே.பாண்டியராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.ஜெகன்மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை மாநிலத்தலைவர் அ.முத்துகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story