ஸ்வெட்டர், பனிக்குல்லா விற்பனை அதிகரிப்பு


ஸ்வெட்டர், பனிக்குல்லா விற்பனை அதிகரிப்பு
x

கடும் குளிர் காரணமாக ஸ்வெட்டர், பனிக்குல்லா விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக தஞ்சை மாநகரில் ஏராமான சாலையோர கடைகளும் போடப்பட்டுள்ளன. இங்கு ரூ.60 முதல் ரூ.800 வரை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

கடும் குளிர் காரணமாக ஸ்வெட்டர், பனிக்குல்லா விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக தஞ்சை மாநகரில் ஏராமான சாலையோர கடைகளும் போடப்பட்டுள்ளன. இங்கு ரூ.60 முதல் ரூ.800 வரை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடும் குளிர்

தஞ்சை மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதற்கு, தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்த மழையும் ஒரு காரணமாகும். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரியை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. தற்போது மாலை 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 7 மணி வரை இருக்கிறது. 7 மணிக்குப்பிறகு பனிப்பொழிவு இல்லாவிட்டாலும் குளிர் நிலவுகிறது.அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக பனிமூட்டம் கடுமையாக இருப்பதுடன், குளிரும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கடுங்குளிரால் அவதிப்படுகின்றனர். பனியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பலபேர் ஸ்வெட்டர், தலையில் குல்லா அணிந்து வருகின்றனர்.

ஸ்வெட்டர், பனிக்குல்லா விற்பனை

இவைகள் ஜவுளிக்கடைகளில் கிடைத்தாலும் தஞ்சை பழைய பஸ் நிலையம், காந்திஜிசாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, அண்ணாசிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலை, ரெயிலடி, மேம்பாலம், மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோர தற்காலிக கடைகளிலும் விதவிதமான வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சாலையோர கடைகளில் ஸ்வெட்டர், பனிக்குல்லா, மப்ளர், பெண்கள் தலையில் கட்டும் ஸ்கார்ப் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

விற்பனை அதிகரிப்பு

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நான் பெங்களூருவில் இருந்து ஸ்வெட்டர், பனிக்குல்லா ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து வந்து சில்லரையாக விற்பனை செய்து வருகிறேன். இவை அனைத்தும் நேபாளம், லூதியானா போன்ற இடங்களில் இருந்து தயாரித்து விற்பனைக்கு வருகிறது. இந்த ஆண்டு கடும் குளிர் நிலவி வருவதால் ஸ்வெட்டர், ஸ்கார்ப், பனிக்குல்லா ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர்.

இதில் தரத்தை பொறுத்து சிறுவர்களுக்கு ரூ.250-ல் இருந்தும், பெரியவர்களுக்கு ரூ.350-ல் இருந்தும் ஸ்வெட்டர்கள் விற்பனைக்கு உள்ளது. அதிகபட்சமாக ரூ.800 வரையிலான ஸ்வெட்டர்கள் விற்பனைக்கு உள்ளது. இதே போல் ஸ்கார்ப் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், பனிக்குல்லா சிறுவர்களுக்கு ரூ.100-ல் இருந்தும், பெரியவர்களுக்கு ரூ.150-ல் இருந்தும் உள்ளது. மேலும் ஸ்கார்ப், பனிக்குல்லா தற்போது 10-க்கும் மேற்பட்ட வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.என்றார்.இதேபோல, திருப்பூர், ஈரோட்டில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட சால்வை சில்லரை விலையில் ரூ.300 முதல் ரூ.450 வரையிலும், போர்வை ரூ.150 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கம்பளி போர்வைகள் ரூ.500 முதலும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story