மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நீச்சல் போட்டி
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நீச்சல் போட்டி நடைபெற்றது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் மயோபதி காப்பகத்தில் நடிகர் நெப்போலியனின் ஜீவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது. போட்டியில் 15 வயதுக்குட்பட்ட பிறவி குறைபாடு, மரபணு சிதைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் பாலா, சபரி ஆகிய குழந்தைகள் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் கிருபாகரன், சுரேஷ் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர். வெற்றி பெற்றவர்கள் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முயற்சி செய்வதாக நீச்சல் பயிற்சியாளர் டாக்டர் டேனியல் கூறினார். இதில் வெள்ளாங்குளி மயோபதி காப்பகம் டாக்டர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story