கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்


கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்
x

நாமக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கியது.

நாமக்கல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தொடங்கியது. இப்பயிற்சி முகாம் வருகிற ஜூன் மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா கூறியதாவது:-

நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் 12 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாம், மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். கட்டண தொகையை கிரெடிட் கார்டு, ஜி பே உள்ளிட்ட ஆன்லைன் வழியில் மட்டுமே செலுத்த முடியும். நீச்சல் கற்றுக்கொள்ள வரும் சிறுவர்கள் குறைந்தபட்சம் 4 அடி (120 செ.மீ.,) இருக்க வேண்டும். முதல்கட்ட பயிற்சி முகாம் மே மாதம் 7-ந் தேதி வரை நடக்கிறது. மே மாதம் 1-ந் தேதி விடுமுறை நாள் ஆகும். இதேபோல் 2-ம் கட்ட பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே மாதம் 23-ந் தேதி முதல் ஜூன் மாதம் 4-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

தினசரி காலை 8 முதல் 11 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story