ஆதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பனப்பாக்கம் ஆதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம், ஒச்சேரி செல்லும் சாலையில் ஆதி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு நேற்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்பு கோவில் வளாகத்தில் ஊஞ்சல் அமைத்து ஏலவார்குழலி ஏகாம்பரநாதேஸ்வரர் அலங்காரம் செய்து ஊஞ்சலில் வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
Related Tags :
Next Story