எல்லை காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை


எல்லை காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை
x

மேல்நாயக்கன்பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

திமிரியை அடுத்த மேல்நாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள எல்லை காளியம்மன் கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதனை முன்னிட்டு எல்லை காளியம்மன் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. தொடர்ந்து பம்பை, உடுக்கை வாத்தியங்கள் முழங்க உற்சவர் எல்லை காளியம்மன் கோவிலை வலம் வந்து, ஊஞ்சல் மண்டபதை அடைந்ததும் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல்கள் பாடி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story