தமிழக நீச்சல் அணிக்கு திருப்பூர் அரசு பள்ளி மாணவி தேர்வு


தமிழக நீச்சல் அணிக்கு திருப்பூர் அரசு பள்ளி மாணவி தேர்வு
x
திருப்பூர்


திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா. இவர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலியில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலமாக தமிழக நீச்சல் அணிக்கு அர்ச்சனா தேர்வாகியுள்ளார். டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அர்ச்சனா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Next Story