நாமக்கல்லில் மாநில வாள்சண்டை தேர்வு போட்டி


நாமக்கல்லில் மாநில வாள்சண்டை தேர்வு போட்டி
x
நாமக்கல்

2023-2024-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான வில்வித்தை மற்றும் வாள்சண்டை தேர்வு போட்டி நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவாரூர், சென்னை, ராணிப்பேட்டை, நீலகிரி, திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 9 வில்வித்தை மாணவர்கள் மற்றும் வாள்சண்டை போட்டியில் 49 பேர் கலந்துகொண்டனர்.

மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன், வில்வித்தை பயிற்றுனர் ரசிகா, வாள்சண்டை பயிற்றுனர்கள் பிரபுகுமார், ஜிஜோ நிதி மற்றும் தினேஸ் தேவராஜ் ஆகியோர் மாணவ-மாணவிகளை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நீச்சல் பயிற்றுனர் ரகுபதி, இறகுபந்து பயிற்றுனர் சீனிவாசன் மற்றும் கேலோ இந்தியா மாவட்ட விளையாட்டு மையம் வாலிபால் பயிற்றுனர் சிங்குதுரை ஆகியோர் உடன் இருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story