தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை நெருங்கிவிட்டோம்: ஐ.ஜி.கண்ணன் பேட்டி


தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை நெருங்கிவிட்டோம்: ஐ.ஜி.கண்ணன் பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2023 1:17 PM IST (Updated: 16 Feb 2023 1:25 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக கர்நாடகாவில் தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப்பை போலீசார் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளை கும்பல் ஒன்று 4 ஏடிஎம் மையங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, மொத்தம் 75 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடக்கு மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள் கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஒவ்வொரு ஏ.டி.எம். மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், அரியானாவை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்துள்ளனர் என்றும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது.

ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆரீப் என்பவரை பெங்களூருவில் கைதுசெய்து விசாரித்து வருகிறோம். மேலும், கர்நாடகா, அரியானாவை சேர்ந்த 2 பேர் மற்றும் குஜராத்தை சேர்ந்த 6 பேர் என 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த பகுதிகளுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானாவை சேர்ந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கர்நாடகாவின் கோலார் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து பின் திருவண்ணாமலைக்கு கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளைக்கு முன்பு கொள்ளையர்கள் நோட்டமிடுவதற்காக திருவண்ணாமலைக்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். கொள்ளை நகழ்த்திய பின் கொள்ளையர்கள் பெங்களூரு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அரியானா தப்பிச்சென்றனர்.

அரியானாவ்வை சேர்ந்த கொளையர்களுக்கு பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவிசெய்துள்ளனர். அரியானாவை சேர்ந்த கொள்ளையர்களை பிடிக்க அம்மாநில போலீசார் உதவி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story