அரசு பள்ளிக்கு மேஜை, இருக்கைகள்; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வழங்கினார்
சமூகரெங்கபுரம் அரசு பள்ளிக்கு மேஜை, இருக்கைகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் வழங்கினார்.
இட்டமொழி:
சமூகரெங்கபுரம் சீமாட்டி அம்மாள், முத்தம்மாள் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதி மூலம் ரூ.2.38 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 24 மேஜைகள்- இருக்கைகள், 2 இரும்பு மேஜைகள், 2 நாற்காலிகளை பள்ளியில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி, மேஜை, நாற்காலிகளை வழங்கினார்.
ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞா.மி.ஜோசப் பெல்சி, ராதாபுரம் யூனியன் ஆணையாளர் பிளாரன்ஸ் விமலா, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான சமூகை முரளி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி அருள், ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இஸ்யூஸ் நன்றி கூறினார்.