மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி


மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாவட்டங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாவட்டங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிக்கு டேபிள் டென்னிஸ் செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 19-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியை டாக்டர் மணிமேகலை தொடங்கி வைத்தார். இதில் 9 வயதிற்கான பிரிவில் காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர் சர்வின், 11 வயதிற்கான மாணவர்களுக்கான பிரிவில் காரைக்குடி கார்மல் பள்ளி மாணவர் ஜெய்சந்திரன், பெண்கள் பிரிவில் இண்டல் வித்யாலயா மாணவி திவ்யாதர்ஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தி லீடர்ஸ் பள்ளி மாணவர் அகிலேஷ், பெண்கள் பிரிவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி சனா ஆகியோர் முதலிடம் பெற்றனர். மாணவி சனா, மாணவர் ஜெய்சந்திரன் ஆகியோர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதால் அவர்களை சிவகங்கை மாவட்ட தலைவர் செல்வக்குமரன், சிறப்பு விருந்தினர் டாக்டர் மதுசூதனன் ஆகியோர் பாராட்டினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன், இணை செயலாளர் ஜெய்விக்னேஷ் ஆகியோர் பரிசு வழங்கினர்.


Next Story