மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை தாசில்தார் ஆய்வு


மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை தாசில்தார் ஆய்வு
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தாலுகாவில் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை தாசில்தார் ஆய்வு

மயிலாடுதுறை

திருவெண்காடு:

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, ஊராட்சிகள் தோறும் முகாம்கள் அமைத்து குடும்ப தலைவிகளிடம் விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story