பெட்டிக்கடையில் தாசில்தார் திடீர் சோதனை


பெட்டிக்கடையில் தாசில்தார் திடீர் சோதனை
x

போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் பெட்டிக்கடையில் தாசில்தார் திடீர் சோதனை நடத்தினார்.

ராணிப்பேட்டை

நெமிலியை அடுத்த உளியநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக நெமிலி தாசில்தார் பாலசந்தருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார், நெமிலி போலீசாருடன் சென்று தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினார். ஆனால் எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை.

பின்னர் கடைக்காரரிடம் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்வது கண்டுபிக்கப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இந்த சோதனையின் போது நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story