உண்டு உறைவிடப்பள்ளியில் தாசில்தார் ஆய்வு
சங்கராபுரம் உண்டு உறைவிடப்பள்ளியில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ராஜு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு தரமாக உள்ளதா என்று சரிபார்த்தார். பின்னர் அவர் அங்கிருந்த ஊழியர்களிடம், மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது என்று வலியுறுத்தினார். தொடர்ந்து குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவசதிகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வி்ன்போது தலைமையாசிரியர் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story