பள்ளி-அங்கன்வாடி மையத்தில் தாசில்தார் திடீர் ஆய்வு


பள்ளி-அங்கன்வாடி மையத்தில் தாசில்தார் திடீர் ஆய்வு
x

பள்ளி-அங்கன்வாடி மையத்தில் தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி தாலுகா, வெண்ணாவல்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மயிலடிகாடு கிராமத்தில் 2 ஆசிரியர்களை கொண்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் பள்ளியில் சுமார் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் நேற்று பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சத்துணவு திட்டம் குறித்தும், பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தார். இதில் சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா? என்றும், அதன் தரம், சுவை குறித்தும் சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

இதேபோல் அங்கன்வாடியில் பயின்று வரும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டறிந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்க வேண்டிய அந்த மையத்தில் 5 குழந்தைகள் மட்டுமே இருந்ததால், இதற்கான காரணம் என்ன? என்று கேட்டதோடு, வராத குழந்தைகளை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story