நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தாசில்தார் ஆய்வு
காட்டுப்பாக்கம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தாசில்தார் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
பாணாவரத்தை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் கடந்த வாரம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துவருகின்றனர். இந்த நிலையில் நேற்று நெமிலி தாசில்தார் பாலசந்தர் காட்டுப்பாக்கம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல்கொள்முதல் செய்யவேண்டும். புரோக்கர்கள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் செய்த நெல்லை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்று கூறினார்.
காட்டுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி உடனிருந்தார்.
Related Tags :
Next Story