மாணவியை தாக்கிய தையல் தொழிலாளி கைது


மாணவியை தாக்கிய தையல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை தாக்கிய தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே பெரிய கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவருடைய மகன் மகேந்திரன் (வயது 39). தையல் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அங்குள்ள பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவியிடம் சென்று, நீ ஏன் எனது மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாய்? என்று கூறி அவதூறாக பேசி, தலைமுடியை இழுத்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் சின்ன கோவிலாங்குளம் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.


Next Story