தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம்
சுரண்டையில் தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் நடைபெற்றது.
சுரண்டை:
தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட கூட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக் கூடத்தில் நடந்தது. தென்காசி மாவட்ட தலைவர் வள்ளிநாயகம் தலைமை தாங்கினார். தென்காசி நகர தலைவர் சையது சுலைமான், கீழப்பாவூர் நகர தலைவர் முருகையா, டி.என். புதுக்குடி தலைவர் சமுத்திரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவனணைந்த பெருமாள் வரவேற்றார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பாராட்டினார். இதில் தென்காசி மாவட்ட தலைவராக வள்ளிநாயகம், செயலாளராக ஓவியா சிவனணைந்த பெருமாள், பொருளாளராக முருகேசன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாநில பிரதிநிதியாக தென்காசி செய்யது சுலைமான், புளியங்குடி முருகேசன், கீழப்பாவூர் ராஜரத்தினம், வீரகேரளம்புதூர் பேச்சிமுத்து, சுரண்டை அனிபா, சாம்பவர்வடகரை வைத்திலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.