திருக்கோவிலூர், அரகண்டநல்லூரில்அமுத பூங்காவுக்கு புனித மண் எடுக்கும் நிகழ்ச்சிபா.ஜ.க. சார்பில் நடந்தது
திருக்கோவிலூர், அரகண்டநல்லூரில் அமுத பூங்காவுக்கு புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. சார்பில் நடந்தது.
திருக்கோவிலூர்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக 'என் மண் என் தேசம்' என்றஇயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்றும், அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும்' என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
அதன்படி, திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் தலைமையில் புனித மண் எடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் தல விருட்சமான புன்னை மரம் அமுத பூங்காவில் நடுவதற்காக எடுக்கப்பட்டது.
தொடர்ந்து ஓய்வு பெற்ற திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் திருக்கோவிலூர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன், மண்டல் தலைவர்கள் செல்வகுமார் ரவிச்சந்திரன், பத்ரிநாராயணன், வெங்கடேசன், அரிகிருஷ்ணன், தென்னரசு, மாவட்ட பொது செயலாளர்கள் முரளி, சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.