தக்காளி விற்பனை


தக்காளி  விற்பனை
x

தக்காளி கிலோ ரூ.35-க்கு விற்பனை

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கும், பெரியவெங்காயம் ரூ.35-க்கும், தக்காளி ரூ.35-க்கும் விற்பனையானது.

கேரட் ரூ.80-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.200-க்கும், பீன்ஸ் ரூ.70-க்கும், அவரைக்காய் ரூ.50-க்கும்,இஞ்சி ரூ.260-க்கும், கத்தரிக்காய் ரூ.50-க்கும், முட்டைக்கோஸ் ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.50-க்கும், மிளகாய் ரூ.60-க்கும், கொத்தமல்லித்தழை பெரிய கட்டு ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவல்களை சந்தை வியாபாரி சிவா தெரிவித்தார்.

---------------


Next Story