தம்பிக்கலை அய்யன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தம்பிக்கலை அய்யன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

தேர் திருவிழா

ஈரோடு

அந்தியூர் அருகே பொதியாமூப்பனூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமையானதும் புகழ்பெற்றதுமான தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி முதல் வாரத்தில் தேர் திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தம்பிக்கலை அய்யனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 23, 24-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 42 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் தம்பிக்கலை அய்யனும், 36 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் மாடசாமியும், சிறிய பல்லக்கில் கருப்புசாமியும் மலர்களால் அலங்காரம் செய்து எழுந்தருளுகிறார்கள்.

பின்னர் மடப்பள்ளியில் இருந்து கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தோள் மீது சுமந்து கொண்டு வருகிறார்கள். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து சாமியை வழிபடுகிறார்கள்.

வருகிற 30-ந் தேதி அன்று மறுபூஜையும், அடுத்த மாதம் 7-ந் தேதி பால் பூஜையும் நடக்கிறது.


Next Story