தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 7:00 PM GMT (Updated: 23 Feb 2023 7:00 PM GMT)

அய்யலூரில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்


தமிழர் தேசம் கட்சி, வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஆகியவை சார்பில் வடமதுரையை அடுத்த அய்யலூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசம் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார்.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தொகுதி அமைப்பாளர் சுந்தர் வரவேற்றார். தமிழர் தேசம் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகிடேஸ்வரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது அய்யலூர் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழர் தேசம் கட்சியினர், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் கடவூர் பிரிவில் இருந்து ஊர்வலமாக அய்யலூர் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Next Story