கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு சொற்பொழிவு


கல்லூரி மாணவர்களுக்கு  தமிழ் கனவு சொற்பொழிவு
x

கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு சொற்பொழிவு தத்தனூரில் நாளை (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.

அரியலூர்

தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில் தமிழ் கனவு என்கிற தலைப்பில் சொற்பொழிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத்தில் பயிலும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 800 மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் "மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்னும் பொருண்மையில் மனுஷ்யபுத்திரன் சொற்பொழிவாற்றுகிறார். இந்தநிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தக கண்காட்சி, 'நான்முதல்வன்', வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கி கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்தநிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு 'உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி', 'தமிழ்ப் பெருமிதம்' ஆகிய 2 கையேடுகள் வழங்கப்படுகின்றன.


Next Story