தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது


எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது என மாணவ-மாணவிகள் கூறினர்.

விருதுநகர்

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது என மாணவ-மாணவிகள் கூறினர்.

கூடுதல் மதிப்பெண்

வெம்பக்கோட்டையை சேர்ந்த மாணவி நாகஜோதி:-

தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது. அடிக்கடி படித்த கேள்வி என்பதால் எளிமையான முறையிலும் இருந்ததால் நல்ல முறையில் தேர்வு எழுதி உள்ளோம். கண்டிப்பாக கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். முதல் முறையாக எழுதும் பொதுத்தேர்வு என்பதால் சிறிது பதட்டமாக இருந்தது. ஆனால் கேள்வித்தாளை பார்த்ததும் தெரிந்த வினாக்கள் என்பதால் பதற்றம் குறைந்தது. அடுத்து வரும் தேர்வுகளும் இதை போன்று எளிய முறையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

எளிமையான வினா

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாணவர் ராஜசேகர்:-

முதன் முதலில் பொதுத்தேர்வு எழுதுவதால் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினோம்.

ஆசிரியர்கள் நல்ல பயிற்சி கொடுத்ததால் நல்ல முறையில் தேர்வு எழுதினோம்.

ராஜபாளையத்தை சேர்ந்த மாணவன் லிங்கராஜா:- தொடக்கம் முதல் கடுமையாக படித்தேன். முதன்முதலாக பொதுத்தேர்வு எழுதுவதால் ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் வினாத்தாள் எளிமையாக இருந்ததால் புதிய உத்வேகத்துடன் தேர்வு எழுதினேன். தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. தேர்வு கால நேரமும் போதுமானதாகவே இருந்தது. எனினும் இதேபோன்று மற்ற தேர்வுகளும் இருந்தால் நல்லது.. அனைத்து தேர்வுகளும் முடியும் வரை உடல் நலத்தையும், மனநலத்தையும் மாணவர்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மற்ற தேர்வுகளையும் நன்றாக எழுதலாம்.

ஊக்கம் அளித்த ஆசிரியர்கள்

ஆலங்குளத்தை சேர்ந்த மாணவி காவியா ஸ்ரீ:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை முதன் முதலில் எழுதியதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆசிரியர்கள் எங்களுக்கு தொடர்ந்து பயிற்சியுடன், ஊக்கமும் அளித்து வந்தனர்.

நான் எதிர்பார்த்த வினாக்கள் வந்ததால் கண்டிப்பாக நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். இதேபோன்று அனைத்து பாடங்களிலும் கேள்விகள் எளிமையாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story