தமிழ் கூடல் நிகழ்ச்சி


தமிழ் கூடல் நிகழ்ச்சி
x

ஆரணி அரசு மகளிர் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் பள்ளி மாணவிகளிடையே தமிழ் இலக்கியம், மரபு சார்ந்த பேச்சு போட்டி, தமிழர் வாழ்வு கலாசாரம் குறித்த கட்டுரை போட்டி, தமிழ் அமிழ்து என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தப்பட்டது.

இதில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவிகளுக்கும் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி தமிழ் ஆசிரியர்கள் சாந்தினி, ஸ்ரீதர், சாமுண்டீஸ்வரி, சாந்தி, வேண்டாவரம், கங்காதரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story