தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்: 'திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்த்தாத்தா உ.வே.சா. நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த 'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே.சா அவர்களின் பிறந்தநாள்!
அவர் நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம்! தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story