தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தென்மண்டல செயலாளர் வெள்ளபாண்டியர், புறநகர் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் மணிபாண்டியன், மாநகர் மாவட்ட தலைவர் சிவந்தி சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் வரவேற்று பேசினார்.

கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தமிழகம் முழுவதும் முகாம்களில் வசித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம் என்னும் கொடும் சிறையில் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் உதயசங்கர், செயலாளர் ரமேஷ், பொருளாளர் மாரியப்பன், நெல்லை பகுதி செயலாளர் அலெக்ஸ், மேலப்பாளையம் பகுதி தலைவர் மூக்காண்டி, பொருளாளர் கணேசன், இளைஞரணி பகுதி செயலாளர் நெல்லை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர இளைஞரணி செயலாளர் கருங்குளம் சிவா நன்றி கூறினார்.


Next Story