தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருகே தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி பஸ் நிறுத்தம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், யூரியா தட்டுப்பாட்டில் நடந்த முறைகேட்டை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமதாஸ், செல்வம், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், சி.ஐ.டி.யு. நிர்வாகி ஆனந்தன், விவசாய சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் அழகேசன், ஒன்றிய தலைவர் சேட்டு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story