தொழில்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம்-அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு


தொழில்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம்-அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
x

தொழில்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம்-அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகர்

காரியாபட்டி,

தொழில்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என அமைச்சர் தங்கம் ெதன்னரசு கூறினார்.

பொதுக்கூட்டம்

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் திருச்சுழி சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம் காரியாபட்டியில் நடைபெற்றது. காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி வரவேற்றார்.

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி பேசினார்.

காரணம்

கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

திருச்சுழி தொகுதி மக்களின் நீண்ட கோரிக்கையாக இருந்து வந்த அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் திருச்சுழி தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது இந்தியா முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொழில்பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் தமிழ்நாடுதான் முதலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில்துறையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிதான் காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒன்றிய செயலாளர்கள் பொன்னுத்தம்பி, நரிக்குடி கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கதமிழ்வாணன், கமலிபாரதி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, காரியாபட்டி முன்னாள் நகரச் செயலாளர் தங்கப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ், தி.மு.க. பிரமுகர் வாலை முத்துச்சாமி, நகர துணைச்செயலாளர் கல்யாணி, காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மனோஜ் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story