வரும் 26-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்


வரும் 26-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2022 10:51 AM IST (Updated: 23 Sept 2022 11:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.


மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அவசர சட்டம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வரும் 26-ந் தேதி அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.


Next Story