பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்


பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 July 2023 12:30 AM IST (Updated: 19 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


சென்னை மாகாணம் என பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று ஜூலை 18-ந்தேதி அண்ணா பெயர் சூட்டினார். அன்றைய தினம் தமிழ்நாடு தினம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி, தமிழ்நாடு தினம் குறித்தும், தமிழ்நாட்டின் சிறப்புகள், பெருமைகள், பாராம்பரியங்கள் குறித்தும் பேசினார். மேலும் தமிழ்நாடு என்று எழுத்து வடிவில் மாணவ-மாணவிகள் அமர்ந்து இருந்தனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழாசிரியர் பாலமுருகன் செய்திருந்தார்.



Next Story