தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் தென்பெண்ணை ஆற்றுக்கு தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், தேங்காய்க்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அகில இந்திய கிசான் சபையின் மாநில துணைத்தலைவர் லகுமையா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, இந்திய கிசான் சபை மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.