தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

தோகைமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சையில் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் பாக்கி தொகையை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story