தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x

அய்யலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

திண்டுக்கல்

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், வடமதுரை அருகே அய்யலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில் மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மகப்பேறு நிதிஉதவி, கர்ப்பிணி பராமரிப்பு நிதிஉதவி, சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி, 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.

இதேபோல் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த புகைப்படங்களும் இருந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story