தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட இப்புகைப்பட கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைக்க காய்கனி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம்.

100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள் வழங்குதல், மீண்டும் மஞ்சப்பை, புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்களும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இப்புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


Next Story