இளைஞருக்கு சமூக சேவைக்கான தமிழ்நாடு அரசு முதல்-அமைச்சர் விருது
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு சமூக சேவைக்கான தமிழ்நாடு அரசு முதல்-அமைச்சர் விருது வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் ஆற்றிய பல்வேறு சமூக பணியை பாராட்டி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு முதல்-அமைச்சர் இளைஞர் விருது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜே. எதிர்கால இந்தியா அறக்கட்டளை தலைவர் கோபிக்கு வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா உடன் இருந்தார். மேலும் விருது பெற்ற இளைஞர்களை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story