தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
x

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட கிளையினர் மாவட்ட தலைவர் சிவஞானம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பங்களிப்பு ஓய்வு திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வைரவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில செயலாளர் விஜயகுமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் புகழேந்தி நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ராமர் நன்றி கூறினார்.


Next Story