மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு சொந்தம் கொண்டாடுகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு


மத்திய அரசு திட்டங்களுக்கு  தமிழக அரசு சொந்தம் கொண்டாடுகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு
x

மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு சொந்தம் கொண்டாடுகிறது என்று எச்.ராஜா குற்றம் சாட்டினார்.

மதுரை


மதுரை தமிழ்நாடு ஓட்டலில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புழுகு முட்டையாக உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை. தி.மு.க. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சி செய்து வருகிறது. அதுபோல், மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்கள் என கூறி தமிழக அரசு அதனை சொந்தம் கொண்டாடியும் செயல்படுத்தியும் வருகிறது. ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், எம்.பி பதவிக்கு தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் 16 தலைவர்கள் கொண்ட குழு உள்ளது. அந்த குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story