அனைத்து தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது - அமைச்சர் சி.வி.கணேசன்


அனைத்து தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது - அமைச்சர் சி.வி.கணேசன்
x

தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

சேலம்,

சேலத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வாகிய ஆயிரத்து 500 பேருக்கு பணி ஆணையை தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி கணேசன் வழங்கினார். இதனை தொடர்ந்து சேலத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து முதலீடுகளைப் பெற்று பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story