வாழ்நாள் சான்றை 30-ந் தேதிக்குள் பதிவு செய்யுங்கள் ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்


வாழ்நாள் சான்றை 30-ந் தேதிக்குள் பதிவு செய்யுங்கள் ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
x

வாழ்நாள் சான்றை 30-ந் தேதிக்குள் பதிவு செய்யுங்கள் ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் தங்களின் வாழ்நாள் சான்றை பதிவு செய்ய வேண்டி உள்ளதால், இதுவரை வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர்கள் உடனடியாக தங்களது வாழ்நாள் சான்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வந்து தாக்கல் செய்யலாம்.

இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை, இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்கள் வழியாகவும் வாழ்நாள் சான்றை பதிவு செய்யலாம்.

'ஜீவன் பிரமான்' முகம் செயலியை பயன்படுத்தி ஆண்டு வாழ்நாள் சான்றினை பதிவு செய்யலாம். ஓய்வூதியர்கள் சங்கங்கள் நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு 'ஜீவன் பிரமான்' மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்யலாம். இதுவரை 70 சதவீதம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story