தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி செல்கிறார்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்கிறார்.
ஊட்டி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து காலையில் விமானம் மூலம் புறப்படும் அவர், மதியம் கோவை விமான நிலையத்திற்கு சென்றடைகிறார்.
பின்னர் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு மாலை 5.30 மணிக்கு செல்கிறார். அதன்பின்னர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.
வருகிற 9-ந்தேதி வரை ஊட்டியில் கவர்னர் இருக்கிறார். ஆனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 9-ந் தேதி காலையில் ஊட்டியில் இருந்து புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி, கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story