டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
சென்னை,
மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும் திரும்பப் பெற்ற பாட்டில்கள் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்யவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story