தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்கம்


தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்கம்
x

திருப்பத்தூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்கவிழா நடந்தது. இதில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

திருப்பத்தூர்

புகைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா திருப்பத்தூர் பழைய மக்கள் குறை தீர்வு நாள் கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கிவைத்தனர். 27-ந்தேதி வரை தொடர்ந்து கண்காட்சி நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வழங்கினார்.

அதிகாரிகள்

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் கு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஷ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர் பச்சையப்பன், நகராட்சி ஆணையாளர்கள் ஜெயராம ராஜா, பழனி, மாரிச்செல்வி, ஷகிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், சங்கர், ஒன்றியக் குழு தலைவர் விஜயா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன் வரவேற்று பேசினார். முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.


Next Story