மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் - ராமதாஸ்


மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் - ராமதாஸ்
x
தினத்தந்தி 26 July 2023 2:58 PM IST (Updated: 26 July 2023 3:03 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமலேயே போய்விடுமோ? என்ற வேதனையில் உழன்று கொண்டிருந்த உழவர்களின் கண்ணீரை, பருவமழையைக் கொண்டு துடைத்திருக்கிறாள் இயற்கை அன்னை. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி என்ற அளவை தாண்டி விட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இன்று புதன்கிழமை காலை வரையிலான 3 நாட்களில் மட்டும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் 22.85 டி.எம்.சி அதிகரித்திருக்கிறது. நான்கு அணைகளின் மொத்த நீர் இருப்பு 78 டி.எம்.சியை தொட்டிருக்கிறது. கபினி, ஹாரங்கி ஆகிய அணைகள் நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுமையாக திறந்து விடப்படுகிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால், மொத்தக் கொள்ளளவு 181 டி.எம்.சியைக் கடந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விடுவது எல்லாம் அதிசயம் தான். அது எப்போதோ ஒரு முறை தான் நடக்கும். அதனால், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதனால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story