நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து தமிழ்நாடு தகவல் ஆணையர் விசாரணை


நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து தமிழ்நாடு தகவல் ஆணையர் விசாரணை
x

நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து தமிழ்நாடு தகவல் ஆணையர் விசாரணை நடத்தினார்.

திருநெல்வேலி

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தமிழ்நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்திற்கு வருவாய் துறை தொடர்புடைய 87 மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த மனுக்களில் 41 மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரியகுமார் முன்னிலையில் விசாரணை நடந்தது.

இதில் நேற்று முன்தினம் 21 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 16 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 5 மனுகளுக்கு உரிய தகவல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று மீதமுள்ள மனுக்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரியகுமார் முன்னிலையில் தீர்வு காணும் நோக்கத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் மனுதாரர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.


Next Story