"நாட்டின் பொருளாதார ஆற்றல் மையமாக தமிழ்நாடு விளங்குகிறது" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மாநில உள்நாட்டு உற்பத்தி உயர்வு: “நாட்டின் பொருளாதார ஆற்றல் மையமாக தமிழ்நாடு விளங்குகிறது” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெரும் பெருமிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி. நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு இட்டு செல்கிறது. நமது அயராத முயற்சிகள் 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் 8 சதவீதம் எனும் சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உறுதிசெய்து, இந்திய பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தி உள்ளன.
2022-23 ஆண்டுக்கான நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.14,53,321 கோடியாக உயர்ந்து, 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story