இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது..! மழை பாதிப்புக்கு பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை - அமைச்சர் மெய்யநாதன்
இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது ;
இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிமிடம் வரை பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை அதே சூழலில் இந்த பாதிப்பு மற்ற வட மாநிலங்களில் ஏற்பட்டு இருந்தால் பிரதமர் அவர்கள் உடனடியாக பார்வையிட்டு அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பார்.
அப்படி எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கீடும் இதுவரை செய்யாத நிலையில் அண்ணாமலை உன்மைக்குப் புறமாகப் பேசி வருகிறார் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story