தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 - கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியீடு


தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 - கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியீடு
x

கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தேவை என்று கருதினால் ஒருங்கிணைத்து வகைப்படுத்திக் கொள்ள அரசுக்கு அதிகாரம் வழங்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த, நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


1 More update

Next Story