பவானியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்


பவானியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
x

பவானியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

ஈரோடு

பவானி

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி அந்தியூர் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், தலைவர் கைலாசம், மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை நிலைய செயலாளர் கணல் கண்ணன், மாநில ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினார்கள்.

மாநில ஊடகப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இமானுவேல், ஒலகடம் நகர செயலாளர் ஆறுமுகம், பவானி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தவசியம்மாள், பவானி ஒன்றிய செயலாளர் நாகராஜன் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story